ஆஸ்ட்ரோவின் ‘ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ – முதல் ஒளிபரப்புகளுடன் உற்சாகமான தீபாவளி கொண்டாட்டம் 

• பிரபலங்களை உள்ளடக்கிய உள்ளூர் முதல் ஒளிபரப்புகள் முதல் உலகளாவிய வெற்றிப் படைப்புகள் வரை, இந்தத் தீபாவளி பண்டிகைக் காலத்தில் மலேசியர்களுக்கு 75 மணிநேரத்திற்கும் மேலானச் சுவாரசியமானப் பொழுதுபோக்கு அம்சங்களை ஆஸ்ட்ரோ வழங்குகிறது.

• ராகாவின் பண்டிகைக்காலச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்; இதில் பிரத்தியேகத் தீபாவளிப் பாடலான ‘தாம் தூம் தீபாவளி’, பண்டிகைக்காலக் குறுந்தொடர் மற்றும் அர்த்தமுள்ளச் சமூக நலச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் எனப் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

• நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆஸ்ட்ரோ ஏற்பாடு செய்துள்ள பண்டிகைக்கால நேரடி நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

கோலாலம்பூர்: கதைகள், பொழுதுபோக்கு மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் வாயிலாக மலேசியர்களை ஒன்றிணைக்கும் தனது 30-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனும் பிரச்சாரத்தின் மூலம் தீபாவளியை ஆஸ்ட்ரோ வரவேற்கிறது.

தீபாவளியின் மையப்பகுதியாகத் திகழும் ஒன்றிணைந்த உணர்வால் ஊக்கமளிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், பண்டிகையின் வளமான மரபுகள், கலாச்சாரம் மற்றும் விழுமியங்களைக் கொண்டாடுவதோடு, மலேசியர்களை ஒன்றிணைக்கும் தருணங்கள், பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டங்கள் வாயிலாக அவர்களை ஒன்றுசேர ஊக்குவிக்கிறது.

சமூகங்களை ஒன்றிணைக்கும் பகிரப்பட்ட அனுபவங்களை உருவாக்குவதற்கானத் தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, ரசிகர்கள் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றின் வாயிலாக சுமார் 75 மணிநேரம் வரையிலானப் பண்டிகைக் காலப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்.

உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பிரத்தியேக ஆஸ்ட்ரோவின் அசல் பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் முதல், இந்தியாவிலிருந்து பிரம்மாண்டமானத் திரைப்படங்கள் வரை, இந்தப் பண்டிகைக் காலத் தொகுப்பில் அனைத்துத் தலைமுறையினரும் இணைந்து ரசிக்கக்கூடியப் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

இந்த ஆண்டு கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், ‘சோனி விழா’ (அலைவரிசை 220) எனும் புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பண்டிகைக் காலம் முழுவதும் உயர்தரமானத் தமிழ் உள்ளடக்கங்களை நேயர்கள் தொடர்ந்துக் கண்டுகளிக்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “மலேசியர்களுக்குச் சேவையாற்றி, அவர்களை இணைப்பதில் ஆஸ்ட்ரோ 30 ஆண்டுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், பொழுதுபோக்கின் மூலம் மக்களை ஒன்றிணைப்பதற்குத் தீபாவளி எங்களுக்கு ஓர் அர்த்தமுள்ளத் தருணமாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு, உள்ளூர் தயாரிப்புகள், பிரத்தியேக ஆஸ்ட்ரோவின் அசல் பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் மற்றும் இந்தியாவின் பிளாக்பஸ்டர் பிரீமியர்கள் ஆகியவற்றின் துடிப்பானக் கலவையைக் கொண்ட, 75 மணிநேரம் வரையிலான பண்டிகைக்கால உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். சோனி விழாவுடன் இணைந்துப், பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் கதைகளை ரசிக்கவும், தங்களின் ஆர்வங்களைக் கொண்டாடவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அர்த்தமுள்ள நினைவுகளை உருவாக்கவும் இன்னும் பல வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.

“மேலும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடுத், தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, செழிப்பான மற்றும் அர்த்தமுள்ளத் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் பிரேம் ஆனந்த் மேலும் குறிப்பிட்டார்.

ஆஸ்ட்ரோவில் துடிப்பான உள்ளூர் மற்றும் சர்வதேசப் பண்டிகைக்கால முதல் ஒளிபரப்புகள்
தீபாவளி கொண்டாட்டம் என்ற இசை நிகழ்ச்சி, சவாலை சமாளி என்ற விளையாட்டு நிகழ்ச்சி, அடைக்கலம் மற்றும் மாய ஓவியன் என்ற தொலைக்காட்சித் திரைப்படங்கள், அப் க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் சைந்தவி என்ற இசை நிகழ்ச்சி, காதல் அன்ஃபாலோ என்ற குடும்ப நாடகத் தொடர் மற்றும் பல உள்ளூர் தமிழ் தயாரிப்புகளின் அற்புதமான வரிசை ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும்.

மேலும், இந்தியாவிலிருந்து பாராட்டப்பட்ட நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பண்டிகைக்காலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் சிறந்தத் தொகுப்பைக் கொண்ட சோனி விழா (அலைவரிசை 220) எனும் முற்றிலும் புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையுடன் தீபாவளியை ரசிகர்கள் கொண்டாடலாம். பண்டிகைக்காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கானப் பார்க்கும் தேர்வுகளை மேலும் இது விரிவுபடுத்துகிறது.

ஆஸ்ட்ரோவின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல சர்வதேசத் திரைப்படங்கள் முதல் முறையாகத் திரையிடப்படுகின்றன. தமிழ் முதல் திரையிடல்களில், விளையாட்டு நகைச்சுவைத் திரைப்படமானக் கட்டா குஸ்தி 2, அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமான ராம் அண்ட் லீலா, வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஜி.டி.என்., காதல்-திகில் திரைப்படமான இம்மார்டல், அதிரடித் திரில்லர் திரைப்படமான மகுடம், காதல் நாடகத் திரைப்படமான இதயம் முரளி போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் அடங்கும்.

அதே சமயம், மலையாள ரசிகர்கள் லோகா அத்தியாயம் 1: சந்திரா மற்றும் சர்வம் மாயா போன்ற அமானுஷ்யத் திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். தெலுங்குத் திரைப்படங்களின் சிறப்பம்சங்களில் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த குபேரா மற்றும் சரிபோதா சனிவாரம் ஆகியவை அடங்கும்.

ஜே.எஃப்.டபிள்யூ திரைப்பட விருதுகள் 2026 என்ற விருது வழங்கும் விழா மற்றும் தேனிசை இரவு வித் தேனிசை தென்றல் தேவா லைவ் இன் கான்சட் என்ற இசை நிகழ்ச்சி போன்றச் சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்தப் பண்டிகைக் கால வரிசையை மேலும் மெருகூட்டுகின்றன. இந்தத் தீபாவளிக்குப், பொழுதுபோக்கு ஆர்வலர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் ஏதோ ஒன்று உள்ளதை இது உறுதி செய்கிறது.

பொழுதுபோக்கு மட்டுமன்றி, தனது வானொலி மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகத் தீபாவளி பண்டிகை உணர்வை மெருகேற்றும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை ராகா வழங்குகிறது. இதில், ஷமேஷன் மணி மாறன் இசையமைப்பில், சந்தேஷ் மற்றும் பிரியா பாடியத் தாம் தூம் தீபாவளி எனும் பிரத்தியேகப் பாடலும், ஹந்து ராகா எனும் சிறப்பு குறுந்தொடரும் இடம்பெற்றுள்ளன. பண்டிகைக் கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் விதமாகக், ‘கலக்கல் காலை’ நிகழ்ச்சியின் டுயிட் தீபாவளி பாய் கலக்கல் காலை முன்னெடுப்பின் மூலம், தேவைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆதரவையும் வழங்க மலேசியர்கள் ராகாவுடன் இணைந்துச் செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

நேரடி நிகழ்ச்சிகள் 

ரசிகர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்கும் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து, ஆஸ்ட்ரோ நிறுவனம் பல்வேறு பண்டிகைக்கால நேரடி நிகழ்வுகள் மூலம் கொண்டாட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டுச் சேர்க்கிறது. காஷ் வில்லன், சீலன், தாஷா, மூன் நிலா, திவ்யா கியா உள்ளிட்டத் தங்களுக்குப் பிடித்தமானப் பிரபலங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மலேசியர்களுக்குக் கிடைக்கும்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்துப், பொழுதுபோக்கு அம்சங்கள், ஊடாடும் அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாதத் தருணங்கள் நிறைந்த இந்த உற்சாகமானக் நேரடி நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள்:

• அக்டோபர் 24 மாலை 6 மணி முதல், ஷா ஆலம், எம்.பி.எஸ்.ஏ அரங்கத்தில் நடைப்பெறும் தீபாவளி கொண்டாட்டம்.

• அக்டோபர் 30, கார் நிறுத்துமிடம் பி, புக்கிட் ஜலில் விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெறும் தீபாவளி கார்னிவல் 2026.

• அக்டோபர் 31, பிரிக்பீல்ட்ஸ், கலாமண்டபத்தில் நடைப்பெறும் இசிஆர் இந்திய ஷாப்பிங் கார்னிவல்.

ஆஸ்ட்ரோவின் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் தீபாவளி பிரச்சாரத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

செட்-டாப் பாக்ஸ், நிறுவல் பணி அல்லது ஒப்பந்தம் எதுவும் தேவையில்லாத, மாதம் ரிம39.99*-இலிருந்துக் கிடைக்கப்பெறும் ஆஸ்ட்ரோவின் புதிய ‘முதலில் ஸ்ட்ரீமிங்’ சேவையான Astro X3-யின் சந்தாதாரராகுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *